தைராய்டு மற்றும் செரிமான பிரச்சனைக்கு இதை சாப்பிடுங்க

0
2424
thyroid

திரிகடுகம் என்பது சுக்கு, மிளகு, திப்பிளி என்ற மூன்றின் கலவையே ஆகும். இந்த திரிகடுகமே நாம் இப்போது சந்தித்து வரும் பல நோய்களுக்கு சிறந்து மருந்தாக விளங்குகிறது. திரிகடுகம் தீர்க்கும் நோய்கள் என்னென்ன என்பதை பற்றியும் திரிகடுக சூரணம் செய்வது எப்படி என்பது பற்றியும் பார்ப்போம்.

திரிகடுகம் தீர்க்கும் நோய்கள்:

காய்ச்சல், வயிற்று உப்புசம், உணவில் விருப்பமின்மை, பசியின்மை, பழுதடைந்த செரிமானத்தால் வரும் நோய்கள், கழுத்தில் தோன்றும் நோய்கள், தோல் நோய்கள், இருமல், சளி, சர்க்கரை போன்ற நோய்களை திரிகடுக சூரணத்தின் மூலம் குணப்படுத்தலாம்.

திரிகடுகம் என்ற இந்த திரிகடுகு பல மருந்துக்கு துணை மருந்தாகவும் விளங்குகிறது. திரிகடுகு சிறந்த கார்ப்புள்ளது. நுரையீரல் மற்றும் செரிமான மண்டல பிரச்சனைகளை தீர்க்கவல்லது,இது நெஞ்சு சளியை நீக்கும்.

இன உறுப்புகளின் கோளாறுகளை நீக்கும் ,பெண்களுக்கு கரு முட்டை வெடித்தல் குறைபாடு இருந்தால் பட்டு கருப்புடன் இதை கொடுப்பது சிறந்தது, ஆண்களுக்கு விந்தடைப்பு என்ற பிரச்சனை இருந்தால் திரிகடுகு சார்ந்த சூரணத்தை பயன்படுத்தி வெற்றி பெறலாம்.

மேலும் உடல் எடை மிகுதியாக உள்ளவர்கள், அதிக கொழுப்பு சத்துள்ளவர்கள், Thyroid குறைவாக சுரக்கும் பிரச்சனை உள்ளவர்கள், உடல் வீக்கம் சார்ந்த நோய் உள்ளவர்களுக்கு திரிகடுகு மருந்து நன்றாக வேலை செய்யும்.

திரிகடு சூர்ணம் செய்முறை:

சுக்கு மிளகு திப்பிலி ஆகியவற்றை சம அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் சுக்கிலுள்ள மேல் தோலை சீவி விட்டு மூன்றையும் நன்றாக அரைத்து பொடி செய்துகொள்ளவும்.

 

அளவு:

½ முதல் 1 கிராம் வரை ஒரு நாளைக்கு 2-3 வேளைகள் தேன், நெய், தண்ணீர் இவை மூன்றில் ஏதாவது ஒன்றில் இதை கலந்து உண்டால் நோய்கள் தீரும்.