Home Blog Page 3
வெங்காயம் இல்லாத சமையலறைகளே நம்நாட்டில் இருக்காது எனலாம். சமையல் என்றாலே அதில் வெங்காயம் சேர்க்காத சமையல் பார்த்திடமுடியாது. நம் ஊர்களில் வெங்காயம் இருவகைகளாக பயிரிடப்படுகின்றது. சின்ன வெங்காயம்,பெரிய வெங்காயம் என்கிற இரண்டுவகை இந்தியாவில் மிகப்பிரபலம். வெங்காயத்தின் சமையல் பலன்கள் மட்டுமே நம்மில் பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்கும். ஆனால் அந்த வெங்காயத்தின் இலைகள் மற்றும் தண்டு ஆகிய அனைத்துமே நோய்களை குணமாக்கிடும் சத்தி உள்ளவை என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் ! ஆண்மையை தூண்டிடும் வெங்காயம் : ஆரோக்கியமான உடலுறவிற்கு வெங்காயம் வழிவகுக்கின்றது. வெங்காயத்தை சிறு துண்டுகளாக்கி வானலியில் போட்டு...
இந்தியாவை பூர்வீகமாக கொண்ட கத்திரிக்காய் இன்று உலகம் முழுதிலும் பயிரடப்பட்டு உணவுகளில் அன்றாடம் சேர்த்துக்கொள்ளும் ஒரு அத்தியாவசிய காயாக மாறிவிட்டது எனலாம். ஆனால் உண்மௌயில் கத்திரி காய் வகையல்ல. கத்திரிக்காய் பழவகைகளில் ஒன்று என்பதே பலருக்கு இதனை படித்த பின்னர் தான் தெரியும்.கத்திரிக்காய் மூன்றுவகை நிறங்களில் விளைவிக்கப்படுகின்றது. வெள்ளை நிற கத்திரி, ஊதா நிற கத்திரி மற்றும் கறுப்பு நிற கத்திரி நம் இந்தியாவில் அதிகம் விளைகின்றது. மூச்சுத்தினறலை சீராக்கும் : கத்தரிக்காயின் இலைகள் மூச்சு தினறலினை சீராக்கிடும் தன்மை கொண்டது. கத்திரிக்காயின் வேரானது பெரும்பாலும் ஆஸ்துமா மற்றும் நாசிப் புண்களை...
பார்க்க கரடுமுரடாகவும்,மேடுள்ளமாக தெரிந்தாலுமே அதிக இனிமையும், மணமும் உள்ள பழமிது. நாம் உண்ணும் பழங்களிலேயே அண்ணாச்சி பழம் நமக்கு பல பயன்களை தருகின்றது. பழ வகைகளிலேயே அன்னாசிப்பழம் தான் ஊட்டச்சத்து அதிகம் நிறைந்த பழம். தொப்பையை கரைக்கும் அன்னாசி : ஆண்கள் மற்றும் இளம்பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு.ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு டம்ளரில் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிட்டு இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறு நாள் காலையில்...
கொடி வகையான திப்பிலி பெரும்பாலும் நாட்டுமருந்து கடைகழால் கிடைத்திடும்.வெப்பமான பகுதிகளில் காணப்படும் திப்பிலி இந்தியாவில் அஸ்ஸாம், மேற்கு வங்காளம்,மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கொங்கன், கேரளாவில் வளர்கிறது. திப்பிலியின் கனிகளும் வேரும் பெரும்பாலும் மருத்துவத்தில் பயன்படுகின்றன.மூச்சு உறுப்புகளின் நோய்கள், வயிற்றுப்போக்கு, தோல்நோய்கள்,பித்தநீர்ப்பை நோய்கள்,வலிகளை போக்க திப்பிலி பயன்படுத்தப்படுகிறது. பூச்சிகளை கொல்லும் திப்பிலி : திப்பிலி பொடியுடன் கலந்த மிளகுத்தூள் மயக்கம் மற்றும் உணர்வின்மைகளில் உணர்வு தூண்டும் மூக்குப்பொடியாக செயல்படுகிறது. குழந்தை பெற்ற பெண்களுக்கு இளம் சூடான நீரில் திப்பிலி பொடியை கலந்து கொடுப்பதால் ரத்தப்போக்கு, காய்ச்சல் குணமாகும். குழந்தைகளின் குடல்...
தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் வேப்பமரம் இல்லாத அம்மன் கோயில்களே இருக்காது எனலாம்.வேப்பமரத்தின் காய் முதல் இலை மற்றும் வேர் வரை மருத்துவ குணங்களை கொண்டது என்பது நீங்கள் அறிவீர்களா ! கிராமங்களில் இன்றுவரையிலும் பல்வேறு நோய்களுக்கும் மருந்தாக வேப்பமரமே இருந்து வருகின்றது.வேப்பிலைச் சாற்றைத் தேனுடன் கலந்து உட்கொண்டால் நாள்பட்ட காமாலைநோய் தீரும். புத்தகங்களை அரிக்கும் பூச்சிகளை அகற்றுவதற்கு நூல் நிலையங்களில் வேப்பிலை பயன்படுகிறது. பாட்டி வைத்தியத்தில் வேம்பின் பங்கு : வேப்பம் பழத்தின் ரசத்தை எடுத்து சரும வியாதியுள்ளவர்களுக்கு கொடுத்து வந்தால் நோய் தீரும். மூலம்,...
விழாக்காலங்களில் நம் வீட்டு பெண்களில் மருதானி இல்லா கைகளை பார்ப்பதே அரிது.பெண்களை எவ்வளவுக்கு எவ்வளவு நகைகள் மீது மோகம் கொண்டுள்ளனரோ அதேயளவு மருதானி மீதும் மோகம் கொண்டுள்ளனர் எனலாம். மருதாணியை அழகுக்காக மட்டுமே பலரும் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் மருதாணி இலையை கைகளில் வைப்பதால் பல்வேறு பயன்கள் பெண்களுக்கு கிடைகின்றன.மருதாணியின் முழுத்தாவரமும் மருத்துவ பயன் உடையவையாகும் அதன் இலைகள், பட்டை, மலர், போன்றவை பயனுள்ளவை. உடல் குளிர்ச்சியாக்கிடும் மருதாணி : மருதாணி வைத்துக் கொள்ளும் வழக்கம் சங்க காலத்தில் இருந்தே உள்ளது. மருதாணி இலை கிருமி நாசினி,...
மல்லிகை பூதோட்டத்தில் விளையும் மல்லிகைகளை ரசிக்காத பெண்களே இல்லை எனலாம்.மாலை நேரங்களில் மல்லிகையை சூடிக்கொள்ளாத பெண்களே இல்லை எனலாம்.அப்பேற்பட்ட பெண்களின் காதலி மல்லிகையின் குணங்களை அறிந்து கொள்ள நீங்கள் தயாரா ! வெள்ளை நிறத்தில் பூத்துக்குலுங்கும் மல்லிகை மலர்கள் நறுமணத்திற்காக தலையில் சூடுவதற்கு மட்டுமின்றி பல்வேறு மருத்துவ குணங்களை தன்னுள்ளே கொண்டுள்ளது என்றால் உங்களால் நம்பமுடிகின்றதா ! நீங்கள் நம்பவில்லையென்றாலும் கூட உண்மை அதுதான். பெண்களின் நோயை தீர்க்கும் மல்லிகை. பிரசவத்தில் ஏற்படும் பிரச்சினையினால் தாய்பால் கொடுக்க முடியாமல் மார்பில் சுரந்த பால் கட்டிக்கொண்டு வலி ஏற்படும். இந்த...
கொடிய நோயான மஞ்சள்காமாலையை குணப்படுத்திட இன்றுவரையிலும் பயன்படுவது கீழாநெல்லியே. கீழ்காய் நெல்லி என்ற பெயர் பலஇடங்களில் பலவாறாக கிராமப்புறங்களில் பேச்சுவழக்கில் கீழாநெல்லி, கீழ்வாய் நெல்லி, கீட்காநெல்லி என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. கீழாநெல்லியின் இலை அடிக்காம்பில் வரிசையாக காய்கள் காய்ப்பதால் கீழ்காய்நெல்லி என பெயரிடப்பட்டது. மருத்துவகுணமிக்க வேதிப்பொருட்கள்: கீழ்காய்நெல்லியில் பைல் நிரூலின், நார் செக்குரினின், நிர் பைலின், தேலிக் ஆஸிட், எல்லாஜிக் ஆசிட், ஹேலிக் ஆஸிட் போன்ற 50-க்கும் மேற்பட்ட வேதிப் பொருட்கள் காணப்படுகின்றன. ரத்தசோகையை சீராக்கிடும் கீழாநெல்லி : கீழா நெல்லியும் - கரிசலாங்கண்ணி கீரையையும் சமஅளவு சேர்த்து பாலில்...
கீரைகளை உண்ணாத மனிதர்கள் பெரும்பாலும் ஆரோக்கியமற்றவர்களாகவே இருக்கின்றார்கள் என்று ஒரு மருத்துவ ஆராய்ச்சி தெரிவிக்கின்றது. நாம் உண்ணும் காய்கறிகளில் உள்ள சத்துக்களை விடவும் கீரைகளில் 20 சதவிகிதம் கூடுதலாக சத்துக்கள் காணப்படுகின்றன என்பதை நீங்கள் அறிவீர்களா ! இன்றைய காலகட்டாத்தில் அனைவரையும் ஆட்டி வைக்கும் நோயான ஒரு கொடியநோய் சக்கரைநோய். கீரைகள் நம் உடலில் ஓடும் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது.எனவே நாம் உண்ணும் உணவில் வாரத்திற்கு இரண்டு முறை கீரை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அதிலும் மற்ற அனைத்து கீரைகளையும்...
வாசனை திரவியமான கிராம்பு சமையலுக்காக நம் வீடுகளில் பயன்படுத்தப்படுவது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் இதே கிராம்பு மருத்துவ பொருளாகவும் பயன்பட்டு வருவது உங்களுக்கு தெரியுமா ! பெரும்பாலும் சமையலுக்கும் கறிகளுக்குச் சுவையூட்டவும், கறி மசாலா வகைகள் தயாரிக்கவும் கிராம்பு பயன்படுகின்றது.வாசனைத் தயாரிப்புகளுக்காகவும் சோப்புத் தயாரிக்கவும் கிராம்பு அதிகளவில் பயன்படுகிறது. மேலும் கிராம்பில் உள்ள யூனினால்,வேனிலின்,பைனின் ஆகிய வேதிப்பொருட்கள் மருத்துவத்திற்காக பயன்படுத்தப்படுகின்றன. மேற்கூறியவைகளை எண்ணெய்களாக பயன்படுத்தி பல நோய்களை குணப்படுத்திட முடியும் என்பது உங்களுக்கு ஆச்சரியமாக உள்ளதல்லவா! ஆனால் அதுதான் அறிவியலின் உண்மையும் கூட. கிராம்பின் மொட்டு,...