காலம் காலமாக பார்வை இல்லாதவர்களுக்கு புதிய மரபணு சிகிச்சை மூலம் மீண்டும் பார்வை ?

0
1069

காலம் காலமாக பார்வை குறைபாடினால் ஏற்படும் விழித்திரை நோய் காரணமாக பார்வையை இழந்தவர்களுக்கு தற்போது பார்வை திரும்ப கிடைக்க புதிய மரபணு சிகிச்சை பயன்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள ஐயோவா என்கிற பல்கலைக்கழகம் மேற்கொண்ட இந்த ஆராய்ச்சிக்கு விரைவில் அனுமதி கிடைக்கும் எனத் தெரிகிறது.

வாழையடி வாழையாக ஒரே குடும்ப வம்சத்தில் வருபவர்களுக்கு ஏற்படும் பார்வை குறைபாடுகள் தொடர்பான நோய்களை எல்.சி.ஏ. என்பர். இந்நோயானது மனித இனத்தில் 75ஆயிரத்தில் ஒருவருக்கு ஏற்படுவதாக ஓர் ஆய்வில் நிரூபணமாகியுள்ளது.

இந்நோயானது சிறு வயதில் தொடங்கி பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக பார்வை முழுவதையும் பறித்துவிடும் கொடிய தன்மையுடையது.

இந்த நோயை குணப்படுத்திடவும், மரபணு சிகிச்சை மூலம் மீண்டும் பார்வை கிடைக்க செய்திடவும் இதற்கான ஆய்வை அமெரிக்காவில் உள்ள ஐயோவா பல்கலைக்கழகத்தை சேர்ந்த மருத்துவ ஆய்வாளர்கள் சிலர் முன்னெடுத்தனர்.

இந்த நோய்க்கான பாதிப்பை ஏற்படுத்தாத வைரஸ் ஒன்றை, ஆரோக்கியமான மரபணுக்களை விழியின் திரைகளுக்கு கொண்டு செல்லும் வகையில் ஆய்வாளர்கள் மாற்றினர்.

இதேபோன்று எல்சிஏ நோயால் பாதிக்கப்படும் நோயாளிகளின் விழித்திரையில் ஆரோக்கியமான மரபணுக்களை கொண்டு செல்லும் ஆயிரக்கணக்கான வைரஸ்களை ஆய்வாளர்கள் உட்செலுத்தி ஆய்வு மேற்கொண்டனர்.

எல்சிஏ பாதிப்புக்கு உள்ளான 10ல் 8 பேரால் உருவங்களையும், ஒளியையும் பார்க்க முடிந்தது. முழுதும் சீரான பார்வை கிடைக்கவில்லை என்றாலும் இவர்களால் தெளிவாக பார்க்க முடிந்தது.

இந்த சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பெரும்பாலானோருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இந்த பார்வை நீடிக்கிறது.

விரைவில் பார்வையற்றோர் இல்லாத சமுதாயம் உருவாகிட இந்தவித சிகிச்சை பெரிதும் உதவிடும் என்று தெரிகின்றது.