இறால் உண்பதால் இத்தனை நண்மைகள் கிடைக்குமா – அறிந்திறாத உண்மைகள்!

0
1522
prawn

மீன், நண்டு போன்ற கடல் உணவுகளில் ஒன்றான இறாலில் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற சத்துக்கள் மிகுதியாகவே அடங்கியுள்ளது. மேலும் இதில் கார்போஹைட்ரேட் இல்லாததால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு இறால் ஒரு சிறந்த உணவாகும். சரி இதில் உள்ள சத்துக்கள் எனென்ன என்றும் இதை உண்பதால் என்ன நண்மைகள் உண்டாகும் என்பதையும் காண்போம்.

eral fish

இறாலில் உள்ள கொழுப்பு நல்ல கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பு வகையை சேர்ந்ததால் இதனை உணவில் சேர்த்துக்கொள்ளலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

இதில் செலினியம்(Selenium), புரம் மற்றும் விட்டமின் பி12, D, இரும்புச்சத்து, மக்னீசியம், பாஸ்பரஸ், துத்தநாகம், ஒமேகா 3 போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.

fat

இறால் உண்பதால் உண்டாகும் நண்மைகள்:
இதில் செலினியம் அதிகமாக உள்ளதால் புற்றுநோய் வருவதை தடுக்கிறது.
விட்டமின் பி12 மற்றும் இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் அதிக ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்து இரத்தசோகை வருவதை தடுக்கிறது. ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மனநிலையை மேம்படுத்த உதவுகிறது என ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

B 12

இதில் உள்ள மக்னீசியம் சத்து நீரிழிவு நோய் வருவதை தடுக்கின்றன என ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. கார்போஹைட்ரேட், புரதச்சத்து மற்றும் கொழுப்புச்சத்துக்கள் போன்றவை உடலுக்கு தேவையான சக்தியை தருகின்றன. இதில் அயோடின் உள்ளதால் கர்ப்பிணி பெண்களுக்கு இது உகந்தது.