கண்டங்கத்திரியில் இத்தனை மருத்துவ நன்மைகளா ?

0
1835
kandakathri

கண்டங்கத்திரி என்பது ஒரு செடி வகை. ஈரவகை தரைகளில் நன்கு வளரும் குணமுடையவை.கண்டங்கத்திரியின் மேற்பகுதி முழுவதும் முட்கள் இருக்கும்.

இந்த செடிவகையில் நீல நிற மலர்கள் பூத்திருக்கும் இந்த செடியின் இலைகள், தண்டு, மலர், கனி, விதை ஆகிய முழுத்தாவரமும் மருத்துவ குணம் கொண்டவை.

ஆஸ்துமாவை ஓடவிரட்டும் கண்டங்கத்திரி வேர் :

கண்டங்கத்திரி செடியின் வேர் ஆஸ்துமாவை கட்டுப்படுத்திடும் சக்தி கொண்டது.
கண்டங்கத்திரி விதைகளை எரித்து அதில் வரும் புகையை சுவாசிக்க ஆஸ்துமாவிலிருந்து விடுதலை பெறலாம்.

இருமலை போக்கிடும் கண்டங்கத்திரி சாறு :

கண்டங்கத்திரி பழங்களிலிருந்து பிழிந்தெடுக்கும் சாறு குழந்தைகளின் இருமலை போக்கிட வல்லது.