அருகம்புல் தரும் அற்புத மருத்துவ நன்மைகள்!

0
1211

தோல் நோய்களை குணப்படுத்த கூடியதும், கண் எரிச்சல் வயிற்றுப்போக்கை சரிசெய்ய கூடியதும், புண்களை ஆற்றவல்லதுமான அருகம்புல்லில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. இந்த புல்லின் மீது நடப்பதால் உடலுக்கு புத்துணர்வு கிடைக்கிறது. அதோடு நரம்பு நாளங்களை இது தூண்டக் கூடியது.

அருகல்புல் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. அருகம்புல்லை பயன்படுத்தி தோல் நோய்களுக்கான மருந்து தயாரிக்கலாம். அரிப்பு, சொரி சிரங்கு, படர்தாமரை, வியர்குரு போன்ற நோய் இருப்பவர்கள் அருகம்புல்லை சிறு துண்டுகளாக வெட்டி நன்கு பசை போன்று அரைத்து எடுத்து கொள்ளவும். இந்த பசையுடன் மஞ்சள் சேர்த்து நன்றாக கலக்கி பயன்படுத்தினால் தோல் நோய்கள் குணமாகும்.

அருகம்புல்லை துண்டுகளாக நறுக்கி நீரில் இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் வடிகட்டி ஊறல் நீரை எடுத்து அந்த நீருடன் காய்ச்சிய பால் சேர்த்து காலை, மாலை குடித்துவர கண் எரிச்சல், அரிப்பு போன்றவை சரியாகும்.

அருகம்புல்லை நன்கு கசக்கி சாறு எடுத்து 2 சொட்டு விட்டால் மூக்கில் இருந்து வரும் ரத்தம் நிற்கும். அருகம்புல் சாறு 100 மில்லி அளவுக்கு குடித்துவர மாதவிலக்கின்போது ஏற்படும் அதிக ரத்தப்போக்கு கட்டுக்குள் வரும். அருகம்புல், ரத்தத்தை சுத்தப்படுத்தி தோல்நோய்கள் வராமல் தடுக்கிறது. கோடை வெயிலுக்கு அருகம்புல் சாறு குடிக்கும்போது உடல் குளிர்ச்சி அடையும்.

skin disease

 

அருகம்புல் சாறு 50 மில்லி எடுத்துக்கொண்டு அதோடு புளிப்பில்லாத கெட்டி தயிரை சேர்த்து காலை, மாலை குடித்துவர வயிற்றுபோக்கு, வெள்ளைப்போக்கு சரியாகும்.