சிறுநீரக கற்களை விரட்டி அடிக்கும் அதிசய வெள்ளரி ஜூஸ்

0
1308

படிக்கும் பள்ளி முதல் பேருந்து நிலையம் மற்றும் மார்கெட் வரையிலும் வீதிகளிலும்,சூப்பர் மார்கெட்களிலும் விற்கப்படும் காய் இந்த வெள்ளரிக்காய்.

வெயில் காலங்களில் நம் தாகங்களை தணித்திடும் வெள்ளரியானது உடலுக்கு குளிர்ச்சியூட்டுகின்றது.நீர்ச்சத்து மிக அதிகளவில் உள்ளது வெள்ளரியில்.

வருடம் முழுதும் வெள்ளரியை சேர்த்து வந்தால் எந்நாளும் இளமையாக வாழலாம் என்பது உங்களுக்கு தெரியுமா !

வெள்ளரி சாறு செய்யும் மாயங்கள் :

வெள்ளரி சாற்றில் அதிகளவு நார்சத்தும்,நீர்ச்சத்தும் உள்ளது.
வெள்ளரிச்சாறு நம் உடலின் சிறுகுடலால் சீக்கிரமாக உறிஞ்சப்படுகிறது இதனால் உணவு செரிமான உறுப்பில் ஏற்படும் நல்ல பாக்டீரியாக்கள் அதிகரிக்கப்பட்டு பசியை தூண்டுகின்றது.

புற்றுநோயை தடுத்திடும் :

வெள்ளரியை அதிகளவு உண்டுவருவதால் பெண்களுக்கு ஏற்படும் மிகப்பெரிய பிரச்சனையான மார்பக, கருப்பை, மற்றும் பிற புற்று நோய்களை தடுக்கிறது.

தோல் பளபளக்க :

உடலின் நிறம் மெருகேறவும்,கூந்தல் வளரவும் வெள்ளரி ஊக்குவிக்கின்றது.
அன்றாடம் வெள்ளரி சாறு பருகி வர உடல் நிறம் மெருகேறிடும்.

கண்களின் கீழ் ஏற்படும் கருவளையத்தை மாயமாக மறைந்து போகச் செய்யும் சக்தியுடையது வெள்ளரி. சருமத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி அழகை தெளிவுபடுத்துகின்றது.

வெள்ளரியை அதிகம் சேர்த்து உடல் வனப்பை மெருகேற்றிடுவோம்.