உடலை இளைக்க வைக்கும் கரும்புச்சாறு

0
1697

கரும்பு என்று சொல்லும் போதே இனிக்கும். நம் அன்றாட வாழ்வில் இன்றியமையாதது கரும்பு.

கரும்பின் மூலம் பிரித்தெடுக்கப்படுவதே சர்க்கரை. உலகில் இருநூறு நாடுகளில் பயிரப்பட்டு வரும் சர்க்கரை குளிர்ச்சி தன்மையை நமக்களிக்கின்றது. கரும்பு இனிப்பு தன்மை மட்டுமில்லாமல் மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது.

உடலை இளைக்க வைத்திடும் கரும்பு :

உடல்பருமன் கொண்டவர்களை உடல்மெலிக்க வைப்பதில் கரும்பின் பங்கு அளப்பரியது.
கரும்பு சாற்றை தொடர்ந்து பருகிவர உடல் இளைத்து கட்டுகோப்பாக இருக்க செய்கின்றது.

கரும்பு சாற்றை குடிப்பதினால் தேவையற்ற கொழுப்புகள் கரைகின்றது. இதனால் உடல் ஆரோக்கியத்துடனும் சுறுசுறுப்புடனும் செயல்பட தூண்டுகின்றது.

விஷத்தை முறித்திடும் கரும்பு :

செம்பு, வெள்ளப் பாஷாணம் முதலிய விஷப்பொருட்களின் விஷத்தன்மையிலிருந்து சர்க்கரை விஷமுறிப்பாக செயல்படுகிறது.

ஆறாத புண்களையும் ஆற்றிடவும் இது பயன்படுகின்றது.

கரும்பின் வேரை முறைப்படி குடிநீரிட்டு கொடுத்து வந்தால் சிறுநீர் எரிச்சல் தணிந்து சீராகிடும்.

கரும்பு நமக்கு கிடைத்த பொக்கிஷமே.