10 நாட்களில் தொப்பையை குறைக்கும் அண்ணாச்சி பழம்!

0
1831

பார்க்க கரடுமுரடாகவும்,மேடுள்ளமாக தெரிந்தாலுமே அதிக
இனிமையும், மணமும் உள்ள பழமிது.

நாம் உண்ணும் பழங்களிலேயே அண்ணாச்சி பழம் நமக்கு பல பயன்களை தருகின்றது.
பழ வகைகளிலேயே அன்னாசிப்பழம் தான் ஊட்டச்சத்து அதிகம் நிறைந்த பழம்.

தொப்பையை கரைக்கும் அன்னாசி :

ஆண்கள் மற்றும் இளம்பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு.ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு டம்ளரில் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிட்டு இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறு நாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவேண்டும்.

பத்து நாட்கள் இதேபோல் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொப்பை கரைய ஆரம்பிக்கும் அன்னாசிக்காய்க்கு கர்ப்பப்பையை சுருக்கும் தன்மை உண்டு. எனவே கர்ப்பிணிகள் இப் பழத்தைத் தவிர்க்க வேண்டும்

அசத்தும் அன்னாசியின் மருத்துவகுணம் :

அன்னாசிபழமானது மஞ்சள் காமாலை, தொடார்பேதி போன்ற நோய்களை குணப்படுத்தும்.
மேலும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரகக் கற்களை கரைக்கும் சக்தியுடையது.

இலைகளின் மகிமை :

அன்னாசி இலைகளின் சாறு வயிற்றில் உருவாகும் பூச்சீகளை கட்டுப்படுத்தி அழிக்கின்றது.
அன்னாசி இலைகளின் சாற்றை ஒரு ஸ்பூனுடன் தேன் கலந்து அருந்த, பேதியாகி வயிற்றுப்பூச்சிகள் வெளியேறிவிடும்.

அன்னாசிப்பழச்சாறுடன் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் உள் உறுப்புகள் பலப்படும். கண் ஒளி பெறும். குழந்தைகளுக்கு அடிக்கடி இப்பழச்சாறு கொடுத்து வர பசி ஏற்படும். எலும்பு வளர்ச்சி, உடல் வளர்ச்சி ஏற்படும்.

உணவுக்குடல் பிரச்சனைகளை சீராக்கிடும் :

வயிறு நிறைய உணவு உண்ட பின் ஒரு துண்டு அன்னாசிப்பழத்தை உண்ண எளிதில் ஜீரணம் ஆகும். பழச்சாறில் குடல் செயலை ஊக்குவிக்கும் அமிலம் உள்ளதால் எளிதில் ஜீரண சக்தி அதிகரிக்கும். ஒரு நாளைக்கு தேவையான மாங்கனீஸ் உப்பைப் பெற ஒரு கப் பழத் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் போதும்.

அண்ணாசி பழத்தில் நீர்ச்சத்து 85 சதவிகிதம் உள்ளது. சர்க்கரைப் பொருட்கள் 13 சதவிகிதமும் புரதச்சத்து 0.60 தாது உப்புகள் 0.05 நார்ச்சத்து 0.30 சதவிகித அளவிலும் உள்ளன. சுண்ணாம்புச் சத்து. மணிச்சத்து. இரும்புச் சத்து போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளன. மேலும் வைட்டமின் ஏ, பி, சி போன்றவைகளும் அடங்கியுள்ளன..

இவ்வளவு சத்துள்ள அன்னாசியை நாமும் உண்டு நம்பிள்ளைகளுக்கும் அளித்து நோயற்ற வாழ்வினை வாழ்ந்திடுவோமே.