Home Blog Page 5
food
நிற்ககூட நேரமில்லாத இந்த வேகமான நாகரீக உலகத்திலே நாம் அன்றாடம் மருத்துவமனைக்கு மட்டும் வாழ்கையின் பாதி நேரத்தை, பணத்தையும் செலவு செய்கிறோம். சில காலத்திற்கு முன்பு வரை அதற்கான விடை தெரியாமல் நாம் திணறித்தான் இருந்தோம். ஆனால் இன்று நாம் அதை கொஞ்சம் கொஞ்சமாக உணரத்துவங்கியுள்ளோம். ஆம்! நாம் தவறவிட்ட உணவு பழக்கங்களினால் தான் இதனை நோய்களும் இடர்பாடுகளும். நமது பாரம்பரிய உணவுமுறையில் நம் உடலுக்கு தேவையான அதனை கார்போஹைட்ரேட், ப்ரோடீன், வைட்டமின், கொழுப்புச்சத்து  என்று எல்லாமும் சமநிலையில் உள்ளது. நாம் அதை மறந்துவிட்டு...
thyroid
திரிகடுகம் என்பது சுக்கு, மிளகு, திப்பிளி என்ற மூன்றின் கலவையே ஆகும். இந்த திரிகடுகமே நாம் இப்போது சந்தித்து வரும் பல நோய்களுக்கு சிறந்து மருந்தாக விளங்குகிறது. திரிகடுகம் தீர்க்கும் நோய்கள் என்னென்ன என்பதை பற்றியும் திரிகடுக சூரணம் செய்வது எப்படி என்பது பற்றியும் பார்ப்போம். திரிகடுகம் தீர்க்கும் நோய்கள்: காய்ச்சல், வயிற்று உப்புசம், உணவில் விருப்பமின்மை, பசியின்மை, பழுதடைந்த செரிமானத்தால் வரும் நோய்கள், கழுத்தில் தோன்றும் நோய்கள், தோல் நோய்கள், இருமல், சளி, சர்க்கரை போன்ற நோய்களை திரிகடுக சூரணத்தின் மூலம் குணப்படுத்தலாம். திரிகடுகம் என்ற இந்த திரிகடுகு பல...
mind
மூளை சரியாகச் செயல் படவும் நன்றாக வளரவும் தேவையான சத்துக்கள் நாம் சாப்பிடும் உணவிலிருந்து கிடைத்துவிடும். மூளையின் ஒவ்வொரு செயலுக்கும் நாம் உண்ணும் உணவு அடிப்படையாக அமைகிறது என்கிறது மனோதத்துவ பேராசிரியர் பால்கோல்ட் என்பவரின் ஆய்வு முடிவுகள். ஞாபக சக்தி குறைவாக இருக்கிறதா? எதிலும் அதிக கவனத்துடன் ஈடுபட முடியவில்லையா? இதற்குக் காரணம் நாம் நம் மூளைக்கு தேவையான சத்துக்களை அளிக்கும் உணவை உண்பதில்லை என்பதே. காரட், தக்காளி, திராட்சை, ஆரஞ்சு ஆகிய உணவுகளில் மூளைக்கு மிகத் தேவையான சத்துகள் நிறைந்துள்ளன. ஒரு வாரம் காரட் சாப்பிட்டவர்களையும்,...
milk
குழந்தைகளை வளர்ப்பது என்பது ஒரு கலை என்ற சொல்லாடலை நாம் கேள்விப்பட்டு இருப்போம். அப்படியான கலையை இன்றைய இயந்திர வாழ்க்கையில் நாம் கையாள மறந்துவிட்டோம் என்றே கூறலாம். வீட்டில் முதியவர்கள் இருந்தவரை இக்கலை துளிர்த்துக்கொண்டே இருந்தது. ஆனால் இப்போது முதியோர் இல்லங்கள் பெருகிவிட்ட காரணங்களால் குழந்தை வளர்ப்பு களையும் அழிந்து வரும் கலைகளில் இணைக்கப்பட்டுவிட்டது. இதில்  என்ன கலை உள்ளது என்று நீங்கள் கேட்பீர்கள் என்றால், இதோ உங்களுக்கான சவால் உங்கள் குழந்தையை அடிக்காமல் அதட்டாமல் உங்களால் அவர்களை உண்ணச் செய்துவிட முடியுமா? அப்படி அவர்களை...
slim
உலக உயிர்களுக்கெல்லாம் நீர் என்பது இன்றியமையாத ஒன்று. எல்லா உயிரினங்களின் உடல் கூறுகளிலும் 70% நீரின் பங்கு நிறைந்திருக்கும். உடலில் நீர் சத்து குறைந்து போனால் உள்ளுறுப்புகள் பலவற்றையும் அது பாதிக்கிறது. எனவே நீரை பயன்படுத்தி மருத்துவ முறையை மேற்கொள்ளும் முறைகளை நமது முன்னோர்கள் நமக்கு சொல்லியிருக்கிறார்கள். நெய்யை உருக்கு, மோரை பெருக்கு, நீரை சுருக்கு என்று சொல்வார்கள். இதன் பொருள் என்னவென்றால், நெய்யை நன்றாக உருக்கி பயன்படுத்த வேண்டும். மோரை நன்றாக நீர் மோராக மாற்றி நீர்க்கச் செய்து பருக வேண்டும். அதே...
prawn
மீன், நண்டு போன்ற கடல் உணவுகளில் ஒன்றான இறாலில் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற சத்துக்கள் மிகுதியாகவே அடங்கியுள்ளது. மேலும் இதில் கார்போஹைட்ரேட் இல்லாததால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு இறால் ஒரு சிறந்த உணவாகும். சரி இதில் உள்ள சத்துக்கள் எனென்ன என்றும் இதை உண்பதால் என்ன நண்மைகள் உண்டாகும் என்பதையும் காண்போம். இறாலில் உள்ள கொழுப்பு நல்ல கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பு வகையை சேர்ந்ததால் இதனை உணவில் சேர்த்துக்கொள்ளலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். இதில் செலினியம்(Selenium), புரம் மற்றும் விட்டமின் பி12, D, இரும்புச்சத்து,...
Dengue
டெங்கு’ (Dengue) எனும் வைரஸ் கிருமியால் ஏற்படும் காய்ச்சல் என்பதால், இதற்கு `டெங்குக் காய்ச்சல்’ என்று பெயர். `டெங்கு' என்ற ஸ்பானிய மொழிச் சொல்லுக்கு, `எலும்பு முறிவுக் காய்ச்சல்’ என்று பொருள். அதாவது இந்தக் காய்ச்சலின்போது, எலும்பு முறிவு ஏற்பட்டதுபோல கடுமையான வலி தோன்றும். அதனால்தான் இப்படி அழைக்கப்படுகிறது. இந்த வைரஸ் கிருமிகளில் மொத்தம் நான்கு வகைகள் உள்ளன. ஒரு வகை வைரஸால் டெங்கு உண்டாகி குணமான பின்னர், வாழ்நாளில் திரும்பவும் அதே வைரஸால் பாதிப்பு இருக்காது. அதற்கான எதிர்ப்புச் சக்தி உடலில் உருவாகி...
thirumular
நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், வெப்பம், காற்று, நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைவதால் தான். இதனாலேயே நோய் தோன்றுகிறது. வெப்பத்தால் பித்த நோய்களும், காற்றினால் வாத நோய்களும், நீரால் கப நோய்களும் உண்டாகின்றன. நமது தேகத்தை நீட்டித்து, ஆயுளை விருத்தி செய்ய திருமூலர் சித்தர் எளிய வழியை கூறியுள்ளார். ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று குறிப்பிடுகிறார் திருமூலர். கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு. தேவர்கள் பாற்கடலைக்...
தோல் நோய்களை குணப்படுத்த கூடியதும், கண் எரிச்சல் வயிற்றுப்போக்கை சரிசெய்ய கூடியதும், புண்களை ஆற்றவல்லதுமான அருகம்புல்லில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. இந்த புல்லின் மீது நடப்பதால் உடலுக்கு புத்துணர்வு கிடைக்கிறது. அதோடு நரம்பு நாளங்களை இது தூண்டக் கூடியது. அருகல்புல் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. அருகம்புல்லை பயன்படுத்தி தோல் நோய்களுக்கான மருந்து தயாரிக்கலாம். அரிப்பு, சொரி சிரங்கு, படர்தாமரை, வியர்குரு போன்ற நோய் இருப்பவர்கள் அருகம்புல்லை சிறு துண்டுகளாக வெட்டி நன்கு பசை போன்று அரைத்து எடுத்து கொள்ளவும். இந்த பசையுடன் மஞ்சள்...