பலவித நோய்களுக்கு தீர்வு தரும் இயற்கை உணவு!

0
791

நம் முன்னோர்கள் அனைத்து வியாதிகளுக்கும் “உணவே மருந்து” என்கிற கோட்பாட்டின் படி வாழ்ந்து வந்தனர்.

ஆனால் நாமோ இக்காலத்தில் இயந்திரகதியில் நேரமின்மையால் “ஜங் புட்ஸ்” என்றழைக்கப்படும் பாக்கெட்டில் அடைக்கப்பட்டு நீண்ட நாட்கள் வரை கெட்டுப்போகாத உணவுகளை உண்டு நம் உடல் ஆரோக்கியத்தை அழித்துக்கொண்டு “மருந்து மட்டுமே இருந்து உணவு” என்ற நிலையில் வாழ ஆரம்பித்துள்ளோம்.

இந்த கட்டுரையில் ஆரோக்கிய வாழ்விற்கான இரண்டு சத்தான உணவுமுறைகளை பற்றி காண்போம்.

இந்தியாவில் பெரும்பாலானோருக்கு உள்ள நோய் இரத்த அழுத்த நோய். இந்த இரத்த அழுத்த நோயானது இதயத்தை பலவீனமாக்கி இதயம் தொடர்பான மேலும் பல நோய்களை உருவாக்குகிறது.

இந்த இரத்த அழுத்த நோயினை கட்டுப்படுத்திட நாம் உண்ணவேண்டியன
கீரைகள், முள்ளங்கி, பாகற்காய் ஆகியவை.


மேலே கூறிய காய்கறிகள் குறைந்த கொழுப்புச்சத்தும் குறைந்த கலோரிகளையும் தரக்கூடியவையாகும்.
எனவே தொடர்ந்து உண்டு வந்தால் இரத்த அழுத்தம் மற்றும் இதயம் தொடர்பான நோய்களை தவிர்க்கலாம்.

அடுத்ததாக ஒட்ஸ் உணவை பற்றி காண்போம்.
நம் உடம்பில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை நீக்குவதில் ஒட்ஸ் உணவு முக்கிய பங்கு வகிக்கிறது.

தினமும் காலையில் ஓட்ஸ் உண்டுவர ரத்தத்தில் சேர்ந்துள்ள கெட்ட கொழுப்புக்களை கரைத்து இதயம் தொடர்பான நோய்களை தடுக்கின்றது.