கண் மை பயன்படுத்துவது எப்படி ? 4 எளிய வழிகள் !

0
3163
kaajal

கண் மை ! ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும் வாழ்நாளில் ஒருமுறையாவது இதைநாம் பயன்படுத்தி இருப்போம். பெண்களின் கண்களை அழகுப்படுத்தும் கண் மைக்கு பின்னால் பல சுவாரஸ்ய ரகசியங்கள் அடங்கி இருக்கிறது. கி.மு. 10,000 ஆம் ஆண்டின் துவக்கத்தில், பண்டைய எகிப்து மற்றும் மெசொப்பொத்தேமியா இன மக்களே முதன்முதலில் கண் மை பயன்படுத்தியவர்கள். இயல்பாகவே கலையுணர்வு நிறந்த இவர்கள், தங்களை அழகு படுத்திக்கொள்ளவும், வனப்பகுதியில் தங்களின் சருமத்தைப் பாதுகாப்பதற்கும் கண் மையை பயன்படுத்தியுள்ளனர். உண்மையில் சூரிய ஒளியில் கண் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக தோன்றியதே கண் மை என்று கூறுகின்றனர்.