குடிக்கும் தண்ணீரால் ஆபத்தா ! எச்சரிக்கும் விஞ்ஞானிகள்

0
1041

தண்ணீர் உபயோகிக்காத உயிரினமே உலகில் இல்லை. அவ்வளவு ஏன்,தண்ணீர் இல்லையென்றால் மனிதர்கள் இறந்து இந்த உலகமே அழியப்போகும் நிலையை எட்டிடும் எனலாம்.

மனிதனின் வாழ்வாதாரத்திற்கு அதிமுக்கியமான அத்தியாவசிய பொருளான தண்ணீரே மனிதனுக்கு ஆபத்தானதும் என்றால் நீங்கள் நம்புவீர்களா.ஆனால் உண்மையும் அதுதான்.

தண்ணீரினால் ஏற்படும் நன்மைகளை நாம் ஏற்கனவே நிறைய படித்திருப்போம் அல்லவா,வாருங்கள் தற்போது அதே தண்ணீரின் மற்றொரு முகத்தை காண்போம்.

அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதற்கேற்ப நம் உடலின் தேவைக்கு அதிகமாக தண்ணீர் குடித்தால் உடல் நலத்திற்கு கேடு உண்டாக்கிடும்.

ஒரு நாளைக்கு 2லிட்டர் அளவே நம் உடலிற்கு தேவைப்படுகின்றது.
தாகம் எடுக்கும்போதும் உண்டபிறகுமே தண்ணீர் அருந்திட வேண்டும்.

நம் உடலின் தேவையை தாண்டி தேவையற்ற நேரங்களில் தண்ணீர் குடிக்கக்கூடாது. நாம் தேவையை விட அதிகமாக தண்ணீர் குடிப்பதால் நம்முடைய உடல் உறுப்புகள் எப்பொழுதையும் விட அதிகளவு பணிகளை செய்ய தூண்டப்படுகின்றது.

தொடர்ச்சியாக கூடுதல் வேளைகளை நம் உடல் உறுப்புகள் மேற்கொள்வதால் உடல் நலம் பாதிக்கப்படுகின்றது.

நம் உடலில் உள்ள கலோரியை எரித்திடவும், நீர்ச்சத்தை அதிகரித்து சீராக்கிடவும் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆகையால் நம்முடைய தேவைக்கு ஏற்ப தண்ணீர் அருந்திட வேண்டும்.