உங்கள் விரல்களை கொண்டு உடம்பில் உள்ள பல நோய்களை குணப்படுத்தலாம் !

0
1672

நம் உடம்பில் உள்ள அங்கங்களே நம் நோய்களை நீக்கி நம்மை ஆரோக்கியமுடனும்,உற்சாகத்துடனும் வைத்துக்கொள்ள உதவுகின்றது.

அவைகள் எப்படி என்னவென்று இந்த கட்டுரையில் காண்போமா !நம் முன்னோர்கள் நம் கைவிரல்கள் ஒவ்வொன்றையும் பஞ்ச பூதங்களில் ஒன்றோடு ஒப்பிட்டு உள்ளனர்.

நம் விரல்களில் கட்டை விரலானது நெருப்பொடும், சுட்டுவிரலானது காற்றோடும், நடுவிரலானது ஆகாயத்தோடும்,
மோதிரவிரலானது – நிலத்தோடும் இறுதியாக சுண்டு விரலானதூ நீரோடும் ஒப்பிடப்படுகின்றன.

நியாபக சத்தியை அதிகரிக்கும் கட்டைவிரல் :

யோகா மற்றும்
தியானம் செய்பவர்களை பார்த்தால் அவர்கள் பெரும்பாலும் சுட்டுவிரல் கட்டை விரலைத் தொடும்படி வைத்திருப்பார்கள்.
அப்படியே கண்மூடி அமர்ந்தால் ஞாபகசக்தி அதிகரிக்கும்.

காதுவலியை போக்கிடும் கட்டைவிரல் :

கட்டை விரலை
நடுவிரலால் அழுத்தி பிடித்து தியானம் செய்துவர காதுவலி பஞ்சாய் பறந்திடும்.

இரத்தம் சுத்தமாக வருண் முத்திரை!

சுண்டு விரல் முனையையும் கட்டைவிரல் முனையையும் அழுத்திப்பிடித்தால் இரத்தம் சீராகும். தோல் சம்மந்தப்பட்ட நோய்களும் தீரும்.

கொழுப்பு கரைய சூரிய முத்திரை!

மோதிர விரலை மடக்கி அதன் மேல் கட்டை விரலை வைத்து அழுத்ததியபடி தியானம் செய்தால் உடலின் கொழுப்புகள் குறைந்து செரிமான பிரச்சனைகள் நீங்கிடும்.

விரல்களிலேயே இத்தனை வித்தைகள் இருக்கும்போது இனி நம்முடைய உடலை நாமே விரல் வித்தைகளினால் விரட்டியடிப்போமா !