குழந்தைகளுக்கு பிடிக்கும் தேங்காய்ப் பால்– தினை மாவு பணியாரம்

0
933
milk

குழந்தைகளை வளர்ப்பது என்பது ஒரு கலை என்ற சொல்லாடலை நாம் கேள்விப்பட்டு இருப்போம். அப்படியான கலையை இன்றைய இயந்திர வாழ்க்கையில் நாம் கையாள மறந்துவிட்டோம் என்றே கூறலாம். வீட்டில் முதியவர்கள் இருந்தவரை இக்கலை துளிர்த்துக்கொண்டே இருந்தது.

ஆனால் இப்போது முதியோர் இல்லங்கள் பெருகிவிட்ட காரணங்களால் குழந்தை வளர்ப்பு களையும் அழிந்து வரும் கலைகளில் இணைக்கப்பட்டுவிட்டது. இதில்  என்ன கலை உள்ளது என்று நீங்கள் கேட்பீர்கள் என்றால், இதோ உங்களுக்கான சவால் உங்கள் குழந்தையை அடிக்காமல் அதட்டாமல் உங்களால் அவர்களை உண்ணச் செய்துவிட முடியுமா?

அப்படி அவர்களை உண்ண வைக்க ஒரு மந்திரம் உள்ளது அது தான் அவர்களுக்கு விருப்பமான இனிப்பான சுவையான தரமான உணவுகளை வழங்குவது. அப்படியான ஒரு உணவை செய்யும் செயல் முறையை இப்போது பார்ப்போம்.

தேங்காய்ப் பால்– தினை மாவு பணியாரம்

தேவையானவை:

  • தேங்காய் – அரை மூடி,
  • நெய் – 4 டேபிள்ஸ்பூன்,
  • தினை மாவு – 200 கிராம்,
  • பொடித்த வெல்லம் – ஒரு கப்,
  • வாழைப்பழம் – 1,
  • ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன்.

செய்முறை: தேங்காயைத் துருவி பால் எடுத்துக் கொள்ளவும். தினையை வறுத்து மாவாக அரைக்கவும். வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி, அதனுடன் தேங்காய்ப் பால், தினை மாவு, ஏலக்காய்த்தூள், வாழைப்பழம் சேர்த்து, நன்கு கெட்டியாகக் கரைக்கவும்.பணியாரக்கல்லில் நெய் தடவி, ஒவ்வொரு குழியிலும் மாவை ஊற்றி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, வேக வைத்து எடுக்கவும்.

குறிப்பு:தினை மாவு ஊட்டச்சத்து மிகுந்தது. பழம் சேர்த்து மாலை நேர சிற்றுண்டியாகத் தரலாம்.