பீட்ரூட் மன அழுத்தத்தை பெருமளவு குறைக்கின்றது.

0
1457

உடலில் புதிய இரத்தத்தை சுரக்க வைத்திடும் பீட்ரூட்டில் அதிகளவில் விட்டமின் மினரல் & ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளன.

மன அழுத்தத்தை போக்கிடும் பீட்ரூட் :

தற்காலத்தில் 10ல் 8பேருக்கு மனஅழுத்தம் உள்ளது.
பீட்ரூட் மன அழுத்தத்தை பெருமளவு குறைக்கின்றது.
பீட்ரூட்டில் உள்ள பீடெயின் மூளையில் உள்ள நரம்புகளை தளரச்செய்து, உற்சாகத்தை தருகிறது இதனால் மனஅழுத்தம் குறைந்து புது உற்சாகம் பெருகுகின்றது.

உணர்ச்சியை தூண்டிடும் பீட்ரூட் :

பீட்ரூட்டிலுள்ள போரோன் என்ற மினரல் ஆண், பெண்களின் செக்ஸ் ஹார்மோன்களை அதிகரிக்க செய்கின்றது. இதனால் ஆரோக்கியமான உடலுறவிற்கு வழிவகுக்கின்றது பீட்ரூட்.

தூக்கமின்மையை போக்கிடும் பீட்ரூட் :

பீட்ரூட் உண்பவர்கள் நிம்மதியாக உறங்கிடுபவர்கள் என்று அடித்துச் சொல்கின்றனர் மருத்துவர்கள்.

ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் பீட்ரூட்டை புறக்கணிக்காமல் இனி உணவில் சேர்த்து பயனடைவோமே.