சிவப்பான உதடுகள் பெற எளிய வழி!

0
1085
lipcare

வீடியோ கீழ் இணைக்கப்பட்டுள்ளது 

5000 ஆண்டுகளுக்கு முன்பாக பண்டைய சுமேரிய வம்சத்தை சேர்ந்த ஆண்களும் பெண்களும் உலகில் முதன்முதலில் உதட்டுச்சாயம் எனும் Lipstick பயன்படுத்தியவர்கள் என்று கூறப்படுகிறது. சிவப்பு நிற உதட்டுச்சாயம் பயன்படுத்துவதில் இந்தியர்கள் முன்னோடிகளாக இருந்துள்ளனர் என்பது ஆச்சர்யத்தை தருகிறது. சுமார் 3500 ஆண்டுகளுக்கு முன்பாக பண்டைய சிந்து சமவெளியில் வாழ்ந்த பெண்கள் தங்கள் உதட்டிற்கு சிவப்பு நிறப்பசைகளை பயன்படுத்தி இருக்கின்றனர். ஏறத்தாழ 3000 ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய பஞ்சாப் பகுதியில் வாழ்ந்த மக்கள் தங்களின் திருமண நிகழ்ச்சிகளின் போது மணப்பெண்களுக்கு பயன்படுத்திய அலங்கார ஒப்பனைப் பொருட்களில் உதட்டுச்சாயம் எனும் Lipstick முக்கிய இடம் பிடித்திருக்கிறது.

பொதுவாக ஆலிவ் எண்ணெய், கனிம எண்ணெய், கொக்கோ விதைகளில் இருந்து பெறப்படும் பசைகளை, கொழுப்புகள் மற்றும் மெழுகுகளை பயன்படுத்தி Lipstick தயாரிக்கப்படுகிறது. இன்று உலக அளவில் 14588-க்கும் மேல் பல வண்ணங்களில், பல வித கலவைகளில் Lipstick கிடைக்கிறது.

அன்றும் இன்றும் Lipstick பயன்பாட்டின் காரணம் என்பது, மிகப்பெரிய அளவில் வேறுபடுகிறது. அன்று உதட்டுச்சாயத்தை பயன்படுத்துபவர்கள் அரண்மனைப் பெண்களாகவும், முக்கிய நிகழ்வுகளுக்கு தயாராகிய பெண்களாகவும் மட்டுமே இருந்தனர். அப்போது தொடர்சியான பயன்பாடாக Lipstick இருக்கவில்லை. காரணம் அன்று பெண்கள் இயற்கையாகவே சிகப்பு நிற உதடுகளை கொண்டிருந்தனர். ஆனால் இன்றைய பெண்களுக்கு Lipstick அன்றாடும் பயன்படுத்தும் பொருளாக மாறிவிட்டது. காரணம் உதட்டின் இயற்கையான நிறத்தை மிகக்குறுகிய காலத்திற்குள் இழந்துவிடுகின்றனர். இதற்கு மிகமுக்கிய காரணம், மாசடைந்த இயற்கைச் சூழல், சூரியக்கதிர்களின் தாக்கம், தவறான உணவுப்பழக்கங்கள், மற்றும் மாறுபட்ட வாழ்க்கை முறைகளால் பலருக்கு உதடுகள் மென்மையின்றி, தோலுரிந்தும், கருப்பாகவும், அழகிழந்தும் இருக்கிறது. இன்றைய காலத்தில் இயற்கையாக சிகப்பு நிற உதடு கொண்டவர்களை பார்ப்பது அரிதாகிவிட்டது.

உண்மையில் இயற்கையான முறையில் சிகப்பு நிற உதடுகளை பெற முடியும். அதற்கு சில வழி முறைகள் பின்பற்ற வேண்டும். என்ன செய்ய வேண்டும், எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை வீடியோவை பார்த்து தெரிந்துக் கொள்வோம்.